Img இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 458 ரன் இலக்கு India against first Test South Africa 458 run win target
ஜோகன்னஸ்பர்க், டிச.21-
இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 280 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 244 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து 36 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை இந்தியா ஆடியது. துவக்க வீரர் தவான் சொதப்பியபோதும், அதன்பின்னர் புஜாரா மற்றும் விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியாவின் ஸ்கோர் உயர்ந்தது.
பந்துகளை நாலாபுறமும் விரட்டியடித்து இந்திய ரசிகர்களை குஷிப்படுத்திய புஜாரா தனது 6-வது சதத்தை பதிவு செய்தார். கோலி அரைசதம் கடந்தார். இதனால் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 135 ரன்களுடனும் விராட் கோலி 77 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டத்தின்போது, தொடர்ந்து ஆடிய புஜாரா, 153 ரன்களிலும், கோலி 96 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த விரர்கள் நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை. இதனால் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 421 ரன்கள் குவித்தது. டோனி 29 ரன்கள் எடுத்தார். ஜாகீர்கான் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு 458 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. துவக்க வீரர்களாக பீட்டர்சன், ஸ்மித் ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
...