சாம்பியன்ஸ் லீக் அரைஇறுதி: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி CLT20 rajasthan royals beat chennai in semi final
Tamil NewsYesterday, 05:30
ஜெய்ப்பூர், அக். 5-
5-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் ஐ.பி.எல். முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, ராஜஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தார்.
இதைத் தொடர்ந்து கேப்டன் ராகுல் டிராவிட்டும், ரஹானேவும் ராஜஸ்தானின் இன்னிங்சை தொடங்கினர். டிராவிட் (5 ரன்) கிறிஸ் மோரிசின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். இதன் பின்னர் ரஹானே ஒரு பக்கம் நிலைகொண்டு விளையாட, மறுமுனையில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன என்றாலும் ரன்வேகம் சீராகவே நகர்ந்து கொண்டிருந்தது. வாட்சன் தனது பங்குக்கு 32 ரன்கள் (23 பந்து, 4 பவுண்டரி) விளாசினார். அபாரமாக ஆடிய ரஹானே தொடர்ந்து 3-வது முறையாக அரைசதத்தை (ஹாட்ரிக்) கடந்தார்.
ராஜஸ்தான் அணி ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி எப்படியும் 180 ரன்களை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதி கட்டத்தில் சென்னை பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி, எதிரணியின் ரன்வேட்டையை கட்டுப்படுத்தினர். குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 18 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதில் ரஹானே 70 ரன்களில் (56 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனதும் அடங்கும்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அடுத்து 160 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது.
அடுத்து 160 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி, ராஜஸ்தானின் பந்து வீச்சையும், கச்சிதமான பீல்டிங்கையும் சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் மைக் ஹஸ்சியும் (9 ரன்), முரளிவிஜயும் (14 ரன்) அவசர கதியில் ரன்-அவுட் ஆனார்கள். இந்த வீழ்ச்சியில் இருந்து மீள முடியாமல் சென்னை அணி தத்தளித்தது.
பத்ரிநாத் (8 ரன்), கேப்டன் டோனி (3 ரன்), வெய்ன் பிராவோ (3 ரன்), ஜடேஜா (2 ரன்), ரெய்னா(29) வரிசையாக நடையை கட்டினர்.
இறுதியில், சென்னை அணி 20 முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் ராஜஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 46 ரன்கள் எடுத்தார்.
ஆட்ட நாயகன் விருது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய தம்பெவிற்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment