Sunday, November 3, 2013

வாட்சன் சாதனையை முறியடித்தார் ரோகித் rohit sharma world record sixes

வாட்சன் சாதனையை முறியடித்தார் ரோகித்

ஒரு நாள் போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 16 சிக்சர்கள் அடித்து வாண வேடிக்கை நிகழ்த்தினார்.

இந்த 16 சிக்சர்கள் மூலம் அவர் வாட்சனின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.

2011–ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஹார்னே வாட்சன், வங்காள தேசத்துக்கு எதிராக 15 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதை ரோகித் சர்மா முந்தினார்.

ரோகித் சர்மா அதிகபட்சமாக மெக்காய், டோசர்ட்டி ஓவர்களில் தலா 5 சிக்சர்கள் அடித்தார். மேக்ஸ் லெவலுக்கு 3 சிக்சரும், பல்க்னெருக்கு 2 சிக்சரும், கோல்டருக்கு ஒரு சிக்சரும் அடித்தார்.

அதிக சிக்சர் அடித்த 'டாப் 5' வீரர்கள் வருமாறு:–

1. ரோகித் சர்மா (இந்தியா)– 16 சிக்சர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (பெங்களூர்).

2. வாட்சன் (ஆஸ்திரேலியா)– 15 சிக்சர் வங்காள தேசம் (டாக்கா).

3. மார்ஷல் (வெஸ்ட் இண்டீஸ்) – 12 சிக்சர். கனடா (சிங்சிட்டி).

4. ஜெய்சூர்யா (இலங்கை– 11 சிக்சர். பாகிஸ்தான் (சிங்கப்பூர்).

5. அப்ரிடி (பாகிஸ்தான்)– 11 சிக்சர். இலங்கை (நைரோபியா).

shared via

No comments:

Post a Comment

Pages

Popular Posts

Popular Posts