Img இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தென் ஆப்பிரிக்கா வெற்றி India against 2nd ODI cricket match South Africa win
டர்பன், டிச.8-
இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்பன் கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. 49 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்த இந்தபோட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன் படி முதலில் பேட் செய்து தென் ஆப்பிரிக்கா அணியில், தொடக்க வீரர்கள் டிகாக்கும், அம்லாவும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கினார்.
டிகாக் 118 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அம்லா 117 பந்துகளில் 100 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் முகம்மது சமி அதிகபட்சமாக 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய தரப்பில் ரோகித் சர்மா, தவான் களம் இறங்கினார்கள்.
ஆட்டம் தொடக்கத்திலே தவான் 0 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து களம் இறங்கிய கோலியும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி முதலிலேயே நிலை தடுமாற ஆரம்பித்தது.
அடுத்து களம் இறங்கிய வீரர்கள், சர்மா (18), ரஹானே (8), தோனி (19), ரேய்னா (36) அஸ்வின் (15), ஜடேஜா (26), யாதவ் (1), சமி (8) ஆகிய ரன்களில் தென் ஆப்ரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டம் இழந்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணியில் சோட்சோபே அதிக பட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டெயின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்காவில் 106 ரன்கள் குவித்த டிகாக் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
...
No comments:
Post a Comment