Wednesday, August 21, 2013

ஆஷஸ் டெஸ்ட்: ஷேன் வாட்சன் சதம் Ashes test Shane Watson smashed

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் சதம் அடித்தார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் இரு மாற்றமாக பிரிஸ்னன், பேர்ஸ்டோ ஆகியோருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ், சிமோன் கெர்ரிகன் ஆகியோர் சேர்க்கப்பட்டு டெஸ்டில் அரங்கில் அறிமுகம் ஆனார்கள். ஆஸ்திரேலிய அணியில் ஜேம்ஸ் பவுல்க்னெர் முதல் முறையாக டெஸ்ட் வாய்ப்பை பெற்றார்.


டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்துவிட்ட போதிலும் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 6 ரன்னில் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் கிறிஸ் ரோஜர்சும், ஷேன் வாட்சனும் ஜோடி சேர்ந்தனர். ரோஜர்ஸ் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த, ஷேன் வாட்சன், ஒரு நாள் போட்டி போன்று அதிரடி காட்டினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 118 ரன்களாக எட்டிய போது, ரோஜர்ஸ் 23 ரன்களில் (100 பந்து) அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் (7 ரன்) நிலைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து ஸ்டீவன் சுமித், வாட்சனுடன் கைகோர்த்தார். அபாரமாக ஆடிய ஷேன் வாட்சன் 114 பந்துகளில் தனது 3-வது செஞ்சுரியை பூர்த்தி செய்தார். ஆஷஸ் கிரிக்கெட்டில் அவரது முதலாவது சதமாகும்.

வாட்சன் 176 ரன்கள் எடுத்தபோது, பிராட் வீசிய பந்தில் அவுட் ஆனார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்துள்ளது.

சிடில் 18 ரன்களுடனும், சுமித் 66 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Pages

Popular Posts

Popular Posts