ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியது Australia against One day cricket India win
பெங்ளூர், நவ.3-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 7-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கேட் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த அஸ்திரேலிய அணி முதலில் இந்திய அணிணை பேட் செய்ய பணித்தது.
இந்திய தொடக்க வீரர்களாக களம் கண்ட ரோகித் சர்மாவும், தவானும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர். மேக்கே வீசிய ஒரு ஓவரில் தவான் 3 பவுண்டரிகளை ஓடவிட்டு ரசிகர்களுக்கு களிப்பூட்டினார். இந்த ஜோடி சிறப்பாக செயல்பட்டு முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களை சேர்த்தனர். 17 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் தடைபட்டது.
பின்னர் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் அரைசதம் கடந்திருந்த தவான்( 57 பந்துகளில் 60 ரன்கள்,) தன் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். தொடர்ந்து இந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தி வந்த கோலியும் ரன் அவுட் முறையில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் தனது ஆட்டத்தின் போக்கை மாற்றிய ரோகித் சர்மா சிக்சர் மழையாக பொழிந்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். எதிர்முனையில் ரெய்னா (29 ரன்கள்), யுவராஜ் சிங்(12 ரன்கள்) என விக்கெட்டுகள் சரிந்தபோதும் ரோகித் சர்மா நிலைத்து நின்று ஆடி ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 4-வது சதத்தை பதிவு செய்தார். அவரும் அணி தலைவர் டோனியும் இணைந்து அணியின் எண்ணிக்கையை மளமள என்று உயர்த்தினர்.
ஒருபுறம் டோனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய பந்துவீச்சை பதம் பார்த்தார். இதனால் இந்திய அணி எளிதாக 300 ரன்களை கடந்தது. சிறிது நேரத்தில் டோனியும் தனது அதிரடியை தொடங்க அஸ்திரேலிய அணி நிலைகுலைந்து போனது. நாலாபுறமும் சிக்சரும், பவுண்டரிகளுமாக நொறுக்கிய ரோகித் சர்மா 200 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
இதற்கு முன் இந்திய வீரர்களான சச்சினும், ஷேவாக்கும் மட்டுமே ஒரு நாள் போட்டிகளில் 200 சதம் அடித்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது. அபாரமாக ஆடிய ரோகித் 158 பந்துகளில் 209 ரன்கள்(12 பவுண்டரிகள், 16 சிக்சர்கள்) குவித்திருந்த போது மெக்கே பந்தில் அவுட் ஆனார். டோனியும் (38 பந்துகளில் 62 ரன்கள்) சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். இதன் காரணமான இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 383 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் டோஹர்த்தி 74 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
384 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய அஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பிஞ்ச் 5 ரன்களில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தொடர்ந்து சீரான இடைவெளியில் தனது முதல் வரிசை வீரர்கள் நடையை கட்ட ஒரு நிலையில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி பரிதவித்தது.
அப்போது களம் இறங்கிய மேக்ஸ்வெல் தொடக்கத்திலேயே அதிரடி காட்டி இந்திய பந்து வீச்சாளர்களை மிரட்டினார். இதனால் ஆஸ்திரேலியா அணியின் ரன் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்தது.
சிக்சரும், பவுண்டரிகளுமாக விளாசிய அவர் தனது அதிவேக அரைசதத்தை கடந்தார். இருப்பினும் அவரும் வெகுநேரம் நீடிக்கவில்லை வினய்குமாரின் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் 60 ரன்கள்(22 பந்துகள், 7 சிக்சர்கள், 3 பவுண்டரிகள்) எடுத்திருந்தபோது அவுட்டாகி வெளியேறினார்.
இருப்பினும் ஆஸ்திரேலியாவின் சிக்சர் மழை ஓய்ந்ததாக இல்லை காயம் காரணமாக பின் வரிசையில் களமிறங்கிய வாட்சன் தனது பங்கிற்கு இந்திய பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்தார். அவருக்கு துணையாக பவுல்க்னெர் நிலைத்து நின்று ஆடவே அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. வாட்சன் 22 பந்துகளில் 49 ரன்கள்(6 சிக்சர்கள், 4 பவுண்டரிகள்) ஜடேஜாவின் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
இதற்கு பின்னரே இந்திய ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். பின் வந்த வீரர்களுக்கு இந்தியா அணியின் இமாலய இலக்கை எட்டிப்பிடிப்பது கடினமான காரியமானது. இருப்பினும் விட்டுக்கொடுக்காமல் அதிரடியாக விளையாடிய பவுல்க்னெர் ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார். 9-வது விக்கெட்டிற்கு இவருடன் ஜோடி சேர்ந்த மெக்கே அவருக்கு பக்கபலமாக நின்று ரன் குவிக்க உதவினார்.
அந்த முயற்சியின் பலனாக ஆஸ்திரேலிய அணி 300 ரன்களை கடந்தது. இந்திய பவுலர்களை நெருக்கடி நிலைக்கு தள்ளிய இந்த ஜோடி 326 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரிந்தது. பின்னர் இந்திய எளிதாக வெற்றியை ருசி பார்த்தது.
சிறப்பாக விளையாடிய பவுல்க்னெர் 73 பந்துகளில் 116 ரன்கள்( 6 சிக்சர்கள், 11 பவுண்டரிகள்) அடித்து ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய 58 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
...
shared via
No comments:
Post a Comment