Friday, November 22, 2013

Vinod Kambli hurt Sachin Tendulkar didnot invite him farewell dinner

பிரியாவிடை நிகழ்ச்சிக்கு சச்சின் என்னை அழைக்காதது வருத்தம்: காம்ப்ளி Vinod Kambli hurt Sachin Tendulkar didnot invite him farewell dinner

முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்ட இந்த விருந்துக்கு, தன்னை அழைக்கவில்லை என்று சச்சினின் நண்பர் வினோத் காம்ப்ளி வருத்தம் தெரிவித்துள்ளார்.

1988ம் ஆண்டு பள்ளி மாணவர்களாக இருந்தபோது, சச்சினும், காம்ப்ளியும் இணைந்து விளையாடிய ஒரு கிரிக்கெட் போட்டியில் 664 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தனர். இருவரும் பல ஆண்டுகள் நண்பர்களாக விளங்கினர். சுற்றுப்பயணத்தின்போது ஒரே அறையில் தங்கியிருக்கின்றனர். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் சந்திக்கவோ பேசவோ இல்லை. சில நேரங்களில் செய்திகளை மட்டும் இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சச்சின் தனது பிரியாவிடை விருந்துக்கு அழைக்காதது பற்றி வினோத் காம்ப்ளி கூறியதாவது:-

நானும் சச்சினும் சேர்ந்து உலக சாதனை படைத்தோம். அது திருப்பு முனையை ஏற்படுத்திய இன்னிங்ஸ் ஆகும். எனவே, சச்சின் விருந்து நிகழ்ச்சியில் பேசும்போது என் பெயரையும், எங்கள் உலக சாதனை பார்ட்னர்ஷிப் பற்றியும் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இது என்னை மிகவும் காயப்படுத்தியது.

10 வயதில் இருந்தே சச்சினை எனக்குத் தெரியும். இருவரும் ஒவ்வொரு விஷயத்தையும் பகிர்ந்துகொள்வோம். ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக்கொண்டு முன்னேறினோம். பந்தை நன்றாக அடிப்பது யார் என்பது தொடர்பாக அடிக்கடி ஒப்பீடு செய்யப்படும். ஆனால், நாங்கள் அதற்காக கவலைப்படவில்லை.

பிரியாவிடை நிகழ்ச்சியில் அவர் உணர்ச்சிபொங்க பேசியபோது அவரது கண்களில் கண்ணீர் கசிந்தது. அப்போது எனது உணர்ச்சியையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நாட்டிற்கு சேவை செய்துள்ள அவருக்கு நான் தலைவணங்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Pages

Popular Posts

Popular Posts