Saturday, September 21, 2013

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: யுவராஜ் ராகுல் ஆதிக்கத்தால் இந்தியா ‘ஏ’ அபார வெற்றி west indies against 20 over cricket india a team win

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: யுவராஜ் ராகுல் ஆதிக்கத்தால் இந்தியா 'ஏ' அபார வெற்றி west indies against 20 over cricket india a team win

Tamil NewsYesterday,

பெங்களூர், செப். 21-

இந்தியா  'ஏ' -வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணிகளுக்கிடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் யுவராஜ் சிங், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

துவக்க வீரர்கள் உத்தப்பா (35), உன்முக்த் சந்த் (47), கேப்டன் யுவராஜ் சிங் (52), ஜாதவ் (42) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரஸல் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

215 ரன்கள் என்ற இலக்குடன் பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். குறிப்பாக ராகுல் சர்மாவின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் திணறினர். விறுவிறுப்பாக ஆடிய துவக்க வீரர் பிளெட்சர் 32 ரன்களில் ராகுல் சர்மாவிடம் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின்னர் போனர்(18), தாமஸ் (21) ஆகியோர் சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். ஆனால் மற்ற வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர். இதனால், அந்த அணி 16.2 ஓவர்களில் 121 ரன்களுக்குள் சுருண்டது. 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ராகுல் சர்மா 5 விக்கெட்டுகளும், வினய் குமார் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பேட்டிங்கில் அசத்திய யுவராஜ் சிங், 2 விக்கெட்டுகளும் எடுத்து ஆல்ரவுண்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

முன்னதாக நடைபெற்ற, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

No comments:

Post a Comment

Pages

Popular Posts

Popular Posts