கடைசி போட்டியில் பாகிஸ்தானை வென்றது ஜிம்பாப்வே: டெஸ்ட் தொடர் டிரா Pakistan last match Zimbabwe won Test Series draw
Tamil NewsYesterday,
ஹராரே, செப். 14- பாகிஸ்தான்-ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹராரே நகரில் நடந்தது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 294 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியை முதல் இன்னிங்சில் 230 ரன்னில் சுருட்டியது ஜிம்பாப்வே. 64 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 4-வது நாள் ஆட்டத்தின்போது, 199 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக துவக்க வீரர் மவாயோ 58 ரன்களும், மசகட்சா 44 ரன்களும் எடுத்தனர். இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 264 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி, 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்திருந்தது. மிஸ்பா உல்-ஹக் 26 ரன்னுடனும், அட்னன் அக்மல் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து முன்னேறிய மிஸ்பா, அரை சதம் கடந்து வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் ஆடிய வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால் வெற்றிக் கனவு தகர்ந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 239 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே, 24 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. பொறுப்புடன் ஆடிய மிஸ்பா, 79 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிம்பாப்வே தரப்பில் சடாரா 5 விக்கெட்டுகளும், உத்சேயா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. எனவே, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தது. கடைசி போட்டியின் சிறந்த வீரராக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் சடாராவும், தொடர் நாயகனாக பாகிஸ்தானின் யூனிஸ்கானும் தேர்வு செய்யப்பட்டனர். ஜிம்பாப்வே அணி, 1998ல் பெஷாவரில் பாகிஸ்தானை வீழ்த்தியபின்னர், இப்போது அந்த அணியை சொந்த மண்ணில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ...
Show commentsOpen link
No comments:
Post a Comment