Monday, September 23, 2013

சாம்பியன்ஸ் லீக்: மழையால் இரு போட்டிகளும் ரத்து CLT20 Rain both matches canceled

சாம்பியன்ஸ் லீக்: மழையால் இரு போட்டிகளும் ரத்து CLT20 Rain both matches canceled
Tamil NewsYesterday,

ஆமதாபாத், செப். 24-

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்று மாலை ஆமதபாத்தில் நடைபெற இருந்த 4–வது லீக்கில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லயன்சும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெர்த் ஸ்கார்சர்சும் மோத இருந்தன. டாஸ் ஜெயித்த லயன்ஸ் கேப்டன் அல்விரோ பீட்டர்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆனால் டாஸ் போட்டு முடிந்ததும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மழை கொட்டித்தீர்த்ததால் மைதானத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளி வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இதே மைதானத்தில், நேற்று இரவு நடக்க இருந்த மும்பை இந்தியன்ஸ் (இந்தியா), ஒடாகோ வோல்ட்ஸ் (நியூசிலாந்து) அணிகளுக்கிடையேயான மற்றொரு போட்டியும் ரத்து செய்யப்பட்டு, தலா 2 புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்பட்டன.

...
Show commentsOpen link

No comments:

Post a Comment

Pages

Popular Posts

Popular Posts