சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றி தொடருமா? Champions league cricket Rajasthan Royals team victory continue
Tamil NewsYesterday,
ஜெய்ப்பூர், அக்.1-
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தொடர்ந்து வெற்றியை குவித்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இதுவரை தோல்வியை சந்திக்காத ஒட்டாகோ அணியும் மோதுகின்றன.
5-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்-ஒட்டாகோ அணிகள் மோதுகின்றன.
ஒட்டாகோ அணி 3 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு முடிவு இல்லாத ஆட்டத்துடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 3 ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டத்துடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது.
பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்தை சேர்ந்த ஒட்டாகோ அணியில் சதம் அடித்த நீல் புரூம், ரூதர்போர்டு, ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் ஆகிய சிறந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த சீசனில் உள்ளூரில் நடைபெற்ற 10 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற ஒட்டாகோ அணி, இந்த சாம்பியன் லீக் போட்டியிலும் தகுதி சுற்று உள்பட இதுவரை ஆடிய 5 ஆட்டங்களிலும் தோல்வியை சந்திக்கவில்லை.
இதேபோல் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சிவ் சாம்சன், ரஹானே, ஷேன் வாட்சன் ஆகியோர் பேட்டிங்கிலும், கெவோன் ஹூப்பர், பிரவின் தாம்பே, ஜேம்ஸ் பவுல்க்னெர் ஆகியோர் பந்து வீச்சிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சொந்த ஊரான ஜெய்ப்பூரில் தோல்வியை காணாமல் தொடர்ந்து வெற்றியை குவித்து கோலோச்சி வருகிறது. அந்த அணி அங்கு நடந்த 8 ஐ.பி.எல். ஆட்டங்களிலும், இந்த சாம்பியன்ஸ் லீக்கில் இதுவரை நடந்த 3 ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றி கண்டு இருக்கிறது.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment