Wednesday, September 25, 2013

சாம்பியன்ஸ் லீக்: ராஜஸ்தான் அணி அபார வெற்றி CLT20 league stage rajasthan royals won

சாம்பியன்ஸ் லீக்: ராஜஸ்தான் அணி அபார வெற்றி CLT20 league stage rajasthan royals won
Tamil NewsYesterday,

ஜெய்ப்பூர், செப். 26-

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த லயன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற லயன்ஸ், பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. பிராட் ஹாட்ஜ் (46 ரன், 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டூவர்ட் பின்னி (38 ரன்), ஷேன் வாட்சன் (33 ரன்), கேப்டன் ராகுல் டிராவிட் (31 ரன்) ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

தொடர்ந்து விளையாடிய லயன்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 153 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றியை ருசித்தது. சுழற்பந்து வீச்சாளர் பிரவின் தாம்பே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதையும் அவர் பெற்றார்.

ராஜஸ்தான் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முன்னதாக தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றிருந்தது. சொந்த ஊர் மைதானமான ஜெய்ப்பூரில் முத்திரை பதித்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த ஐ.பி.எல். போட்டியில் இருந்து இங்கு தோல்வி முகமே பாராமல் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த மைதானத்தில் அந்த அணி தொடர்ச்சியாக பெற்ற 10-வது வெற்றி இதுவாகும்.

...
Show commentsOpen link

No comments:

Post a Comment

Pages

Popular Posts

Popular Posts