சாம்பியன்ஸ் லீக்: சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது டைட்டன்ஸ் Champions league titans team win
Tamil NewsToday,
ராஞ்சி, செப். 28-
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று ராஞ்சியில் நடைபெற்ற பி பிரிவு லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், டைட்டன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற டைட்டன்ஸ் அணியின் கேப்டன் டேவிட்ஸ், பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி, அதிரடியுடன் ஆரம்பித்து அமைதியாக பேட்டிங்கை முடித்தது. இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது.
துவக்க வீரர்களான பார்த்தீவ் படேல் 26 ரன்களிலும், கேப்டன் ஷிகார் தவான் 37 ரன்களிலும் (21 பந்துகள், 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட்டை இழந்தனர். டுமினி 17 ரன்களும், பெரேரா 11 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய டேல் ஸ்டெயின் 27 ரன்களுடனும், சமி 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பின்னர், 146 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய டைட்டன்ஸ் அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பந்துகளை பவுண்டரிகளும், சிக்சர்களுமாக பறக்கவிட்ட கேப்டன் டேவிட்ஸ் 42 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். மற்றொரு துவக்க வீரர் ருடால்ப், 42 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார்.
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டி வில்லியர்ஸ், ஹெய்னோ குன் இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் டைட்டன்ஸ் அணி 16.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 147 ரன்கள் எடுத்த டைட்டன்ஸ், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment