Tuesday, September 17, 2013

ஐ.சி.சி. பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார் ஜடேஜா ICC bowling rankings Jadeja continues at the top

ஐ.சி.சி. பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார் ஜடேஜா ICC bowling rankings Jadeja continues at the top

Tamil NewsYesterday

துபாய், செப். 17- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தனது கடைசி ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தை 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடரை வென்றதையடுத்து, நேற்று இரவு ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கிறார். ஆனால் ஆல்ரவுண்டர் தரநிலையில் 4-வது இடத்திற்கு பின்தங்கினார். இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் விராட் கோலி, பேட்ஸ்மேன்கள் தரநிலையில் 4-வது இடத்தில் இருக்கிறார். கேப்டன் டோனியின் தரநிலையிலும் (7-வது இடம்) மாற்றம் இல்லை. சுரேஷ் ரெய்னா 16-வது இடத்தில் உள்ளார். பந்துவிச்சாளர் தரநிலையில், முதலிடத்தில் இருக்கும் ஜடேஜாவுடன் வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைனும் 733 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். டாப்-20 வரிசையில் இந்திய வீரர்கள் ஆர்.அஷ்வின்(18), புவனேஸ்குமார் (20) ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், 6 இடங்கள் முன்னேறினார். டாப்-10 வரிசையில் அவர் இப்போது 8-வது இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து தொடரில் 5 விக்கெட் கைப்பற்றிய ஜான்சன், 2011-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக டாப்-10 பட்டியலுக்குள் வந்துள்ளார். ...
Show commentsOpen link

No comments:

Post a Comment

Pages

Popular Posts

Popular Posts