சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றி Champions league cricket Hattrick victory for Rajasthan team
Tamil NewsYesterday,
ஜெய்ப்பூர், செப்.30-
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெர்த் ஸ்கார்சர்சும் (ஏ பிரிவு) மோதின. இதில் முதலில் பேட் செய்த பெர்த் அணி, ராஜஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 120 ரன்களுக்கு சுருண்டது. ஆடம் வோக்ஸ் (27 ரன்) தவிர அந்த அணியில் வேறு யாரும் 20 ரன்களை கூட தாண்டவில்லை.
ராஜஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கெவோன் ஹூப்பர் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் பவுல்க்னெர், பிரவின் தாம்பே தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 16.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் (50 ரன்), ரஹானே (62 ரன்) அரைசதம் அடித்தனர். கேப்டன் டிராவிட் டக்-அவுட் ஆனார்.
தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) சுவைத்த ராஜஸ்தான் அணி இதன் மூலம் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. சொந்த ஊர் மைதானமான ஜெய்ப்பூரில் அந்த அணி தொடர்ச்சியாக பெற்ற 11-வது வெற்றி இதுவாகும்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment