ஆஸி.க்கு எதிரான 2 வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 360 ரன் இலக்கு Australia Against 2nd ODI Cricket India 360 run target
Tamil NewsToday,
ஜெய்ப்பூர், அக். 16-
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதல் போட்டியில் 72 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. முன்னதாக நடைபெற்ற ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் இன்று பிற்பகல் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.
5 வீரர்கள் அரை சதம் கடந்தனர். பின்ஞ் 53 பந்துகளில் 50 ரன்களும், ஹக்ஸ் 103 பந்துகளில் 83 ரன்களும், வாட்சன் 53 பந்துகளில் 59 ரன்களும் சேர்த்தனர். 32 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட மேக்ஸ்வெல், 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 53 ரன்கள் குவித்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் பெய்லி 50 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 92 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா தரப்பில் பந்துவீச்சாளர் வினய் குமார் 9 ஓவர்கள் வீசி, 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அஷ்வின் ஒரு விக்கெட் எடுத்தார்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment