Thursday, October 17, 2013

மும்பை கிரிக்கெட் சங்க தலைவராகிறார் சரத்பவார் Mumbai Cricket Association chief Sharad Pawar

மும்பை கிரிக்கெட் சங்க தலைவராகிறார் சரத்பவார் Mumbai Cricket Association chief Sharad Pawar

Tamil NewsToday,

மும்பை, அக்.18-

மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு மத்திய மந்திரி சரத்பவார் மீண்டும் போட்டியிடுகிறார்.

சரத்பவாரை எதிர்த்து பாரதீய ஜனதா தலைவரும், மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரியுமான கோபிநாத் முண்டே மனு தாக்கல் செய்து இருந்தார்.

மும்பை நகரம், புறநகரம் மற்றும் தானே மாவட்டங்களில் நிரந்தர முகவரி கொண்டவர்கள் மட்டுமே மும்பை கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிட முடியும் என்பது விதிமுறையாகும். கோபிநாத் முண்டே மராட்டியத்தில் உள்ள பீட் மாவட்டத்தை சேர்ந்தவர். இதனால் அவரது மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். இதைத்தொடர்ந்து கோபிநாத் முண்டே, மும்பை கிரிக்கெட் சங்க செயலாளரிடம் செய்த அப்பீல் மனுவும் நேற்று நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து கோபிநாத் முண்டே மும்பையில் உள்ள சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அவரது மனுவை கோர்ட்டு ஏற்றுக்கொள்ள மறுத்தால் சரத்பவார் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படுவார். மற்ற பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.

இது குறித்து கோபிநாத் முண்டே கருத்து தெரிவிக்கையில், நீதி கிடைக்காததால் நான் கோர்ட்டை அணுகி இருக்கிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். எனது பாஸ்போர்ட் மற்றும் டெலிபோன் பில்கள் எனக்கு மும்பையில் வீடு இருப்பதை நிரூபிக்கும். மும்பை கிரிக்கெட் சங்கத்தில் சரத்பவார் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்த ஆதிக்கத்தை எதிர்த்து போராட நான் விரும்புகிறேன். இதனால் தான் அவர்கள் என்னை போட்டியிட அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றார்.

சரத்பவார் மும்பை கிரிக்கெட் சங்க தலைவராக 2001 முதல் 2011-ம் ஆண்டு வரையும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக 2005 முதல் 2008-ம் ஆண்டு வரையும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக 2010 முதல் 2012-ம் ஆண்டு வரையும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

No comments:

Post a Comment

Pages

Popular Posts

Popular Posts