விஸ்டன் கனவு அணியில் சச்சின்
விஸ்டன் கனவு டெஸ்ட் அணியில் சச்சின் இடம் பெற்றார். கிரிக்கெட் உலகின் பைபிள் என போற்றப்படும் விஸ்டன் இதழின் 150வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கனவு உலக டெஸ்ட் லெவன் அணி வெளியிடப்பட்டது.
இதில், இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக நான்கு பேர் இடம் பெற்றனர். கேப்டனாக மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா சார்பில் சச்சின் மட்டும் இடம் பிடித்தார்.
இவர் "பேட்டிங்' வரிசையில் 4வது வீரராக இடம் பெற்றார். கவாஸ்கர், கபில்தேவ், லாரா, காலிஸ், பாண்டிங் போன்றோர் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விஸ்டன் உலக டெஸ்ட் அணி: டான் பிராட்மேன்(ஆஸி.,கேப்டன்), கிரேஸ்(இங்கிலாந்து), ஜேக் ஹாப்ஸ்(இங்கிலாந்து), சச்சின்(இந்தியா), விவியன் ரிச்சர்ட்ஸ்(வெ.இண்டீஸ்), கேரி சோபர்ஸ்(வெ.இண்டீஸ்), ஆலன் நாட்(இங்கிலாந்து), வாசிம் அக்ரம்(பாக்.,), வார்ன்(ஆஸி.,), மால்கம் மார்ஷல்(வெ.இண்டீஸ்), சிட்னி பார்ன்ஸ்(இங்கிலாந்து).
shared via
No comments:
Post a Comment