Tuesday, October 22, 2013

200 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிக்கெட்டில் சச்சின் படம் Sachin Tendulkars photo on all tickets for 200th Test cricket

200 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிக்கெட்டில் சச்சின் படம் Sachin Tendulkars photo on all tickets for 200th Test cricket

மும்பை, அக். 22-

கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்துள்ள சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

நவம்பர் 14-ம்தேதி முதல் 18-ம் தேதி வரை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிதான் சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியாகும். இப்போட்டியின் முடிவில் சச்சினுக்கு பிரமாண்ட பிரிவுபசார விழா நடத்தப்படுகிறது. எனவே, இந்த போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில், சச்சினைக் கவுரவிக்கும் வகையில், அவர் பங்கேற்கும் கடைசி போட்டியின் டிக்கெட்டுகள் அனைத்திலும் அவரது புகைப்படத்தை அச்சிட்டு வெளியிட மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. மேலும் சச்சினின் சாதனைகள், அவரது 24 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களின் புகைப்படத் தொகுப்புகள் அடங்கிய குறிப்பேட்டையும் வெளியிட உள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்து போட்டியைக் காண வரும் சச்சினின் நண்பர்களுக்கு வழங்குவதற்காக சச்சினிடம் 500 டிக்கெட்டுகளை மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் கொடுக்கப்படும். 

...

shared via

No comments:

Post a Comment

Pages

Popular Posts

Popular Posts