பாகிஸ்தானுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி: தொடர் டிரா ஆனது pakistan against 2nd test south africa innings win match draw
துபாய், அக். 26-
பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ம் தேதி துபாயில் உள்ள சர்வதேச ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 99 ரன்களில் சுருண்டது.
அதன்பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் டி வில்லியர்ஸ் அதிரடியாக ஆடினர். ஸ்மித் 234 ரன்களும், டிவில்லியர்ஸ் 164 ரன்களும் விளாச, அந்த அணி முதல் இன்னிங்சில் 517 ரன்கள் குவித்தது.
418 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ம் இன்னிங்சைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் தடுமாறியது. அதன்பின்னர் விக்கெட்டை காப்பாற்றி சற்று நிதானமாக ஆடியதால் ஸ்கோர் ஓரளவு உயர்ந்தது. ஆசாத் சாபிக் 130 ரன்களும், மிஸ்பா 88 ரன்களும் அடித்து அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினர். ஆனால், மற்ற வீரர்கள் சோபிக்காததால், அந்த அணி 4-ம் நாளான இன்று 326 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.
2-வது போட்டியின் சிறந்த வீரராக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு பெற்றார்.
இந்த தொடரையடுத்து இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளன. முதல் ஒருநாள் போட்டி 30-ம் தேதி நடைபெறுகிறது.
...
shared via
No comments:
Post a Comment