200 வது டெஸ்ட் போட்டியில் சச்சினை டக் அவுட் ஆக்குவோம்: சமி சொல்கிறார் WI want Sachin out for a duck in 200th Test
புதுடெல்லி, அக். 28-
கிரிக்கெட் சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடுத்த மாதம் 14ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிதான் சச்சினின் கடைசி போட்டியாகும். இப்போட்டி அவரது சொந்த ஊரான மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியின் முடிவில் அவருக்கு பிரமாண்டமான பிரிவுபசார விழா நடத்தவும் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதனால் சச்சின் விளையாடும் கடைசி போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும் அந்த போட்டியில் சச்சின் சதம் அடிக்க வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில், சச்சினின் வரலாற்று சிறப்பு மிக்க 200-வது டெஸ்ட் போட்டியில் அவரை டக் அவுட் ஆக்கி, பிரிவுபசார விழாவின் உற்சாகத்தை குலைக்க வெஸ்ட் இண்டீஸ் அணி தயாராகி வருகிறது. சச்சினை முதல் பந்திலேயே அவுட் ஆக்க திட்டமிட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் டேரன் சமி கூறினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே வான்கடே மைதானத்தில் சச்சினின் 100-வது சதம் அடிக்கும் முயற்சியை 94 ரன்களில் முடிவுக்கு கொண்டு வந்ததுபோல், இந்த முறையும் அவுட் ஆக்குவோம் என்று சமி கூறுகிறார்.
...
shared via
No comments:
Post a Comment