Tuesday, October 15, 2013

அனைத்து வீரர்களுக்கும் தெண்டுல்கர் சிறந்த ‘ரோல் மாடல்’: இர்பான் பதான் Tendulkar best roll model for all players irfan pathan

அனைத்து வீரர்களுக்கும் தெண்டுல்கர் சிறந்த 'ரோல் மாடல்': இர்பான் பதான் Tendulkar best roll model for all players irfan pathan

Tamil NewsToday,

மும்பை, அக். 15–

கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் அடுத்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். சொந்த மைதானமான மும்பையில் விளையாடும் 200–வது டெஸ்டோடு அவரது சகாப்தம் முடிகிறது.

அனைத்து வீரர்களுக்கும் தெண்டுல்கர் சிறந்த முன்மாதிரி (ரோல்மாடல்) என்று இர்பான் பதான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

எனது கிரிக்கெட் ஆட்டத்தை தொடங்கியபோது தெண்டுல்கர் எனக்கு ஏராளமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். நான் பந்து வீசும்போது என் அருகில் வந்து நேர்த்தியுடன் 'ரிவர்ஸ் சுவிங்' வீசுமாறு கூறுவார்.

அவரிடம் இருந்து நான் ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன். பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிகமாக கற்றுக் கொண்டேன். வீரர்கள் தங்கி இருக்கும் அறையில் நான் அவருடன் 9 ஆண்டுகள் இருந்துள்ளேன். ஆடுகளத்தில் எப்படி ஒழுக்கமாக நடந்து கொள்வது என்பது பற்றி அவரை பார்த்துதான் தெரிந்தோம்.

அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் தெண்டுல்கர் சிறந்த முன்மாதிரி (ரோல் மாடல்) ஆவார். மிட்–ஆன் அல்லது மிட்ஆப் பகுதியில் இருந்து ஓடிவந்து அவர் வழங்கும் பயன் உள்ள ஆலோசனைகளை இனி இழந்து விடுவேன்.

தெண்டுல்கரின் ஓய்வு செய்தி அனைத்து ரசிகர்களுக்கும் கவலை அளிப்பதாகும். 200–வது டெஸ்டில் ரசிகர்கள் மைதானத்துக்கு திரண்டு வந்து அவருக்கு பிரியா விடை கொடுப்பார்கள். தெண்டுல்கர் ஓய்வு பெற்றாலும் எங்கள் இதயத்தை விட்டு செல்லமாட்டார்.

இவ்வாறு இர்பான் பதான் கூறியுள்ளார்.

...
Show commentsOpen link

No comments:

Post a Comment

Pages

Popular Posts

Popular Posts