Thursday, October 10, 2013

யுவராஜ் சிங் அதிரடி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி Australia against cricket india target win

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி Australia against cricket india target win

Tamil NewsToday,

ராஜ்கோட், அக். 10-

ஜார்ஜ் பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று மாலை நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டோனி, பந்துவீச முடிவு செய்தார். முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடியதால் ஸ்கோர் விறுவிறுவென ஏறியது. மேடின்சன் 16 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் வாட்சன்(6), பெய்லி(0) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனாலும், பின்னர் வந்த மேக்ஸ்வெல் அதிரடியாக 4 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவர் 27 ரன்களிலும், ஹேடின் 5 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார்.

அதேசமயம் மறுமுனையில் அரை சதம் கடந்து அபாரமாக ஆடிக்கொண்டிருந்த ஆரோன் பின்ச், 89 ரன்கள் குவித்தார். அவரது விக்கெட்டை வினய் குமார் கைப்பற்றினார். ஹென்ரிக்ஸ் 12 ரன்கள் சேர்த்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.

இந்தியா தரப்பில் புவனேஸ்குமார், வினய் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணியில் சர்மா மற்றும் தவான் களம் இறங்கினர்.

ஆட்டத்தின் 2வது ஓவரில் சர்மா 8 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்த விக்கெட்டுக்கு தவானுடன் ஜோடி சேர ரெய்னா களம் இறங்கினார். இவர் 19 ரன்னில் அவுட் ஆனார். மறு முனையில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த தவான் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.  அடுத்து களம் இறங்கிய கோலி 29 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

5 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங் மற்றும் தோனி, அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார்.

இறுதியில் இந்தியா 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

யுவராஜ் சிங் 35 பந்துகளில் 77 ரன்னும், தோனி 21 பந்தில் 24 ரன்னும் எடுத்தனர்.
...
Show commentsOpen link

No comments:

Post a Comment

Pages

Popular Posts

Popular Posts