நாளை இந்தியா-ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் துவங்கவுள்ள நிலையில் ஆஸ்ட்ரேலிய பீல்டிங் பயிற்சியாளரும் முன்னாள் விக்கெட் கீப்பருமான ஸ்டீவ் ரிக்சன் தோனி பற்றி அச்சம் தெரிவித்துள்ளார்.
"சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தோனி, ரெய்னா, அஷ்வினைப்பார்த்தோம், ஆனால் இவர்களை எதிர்கொள்வதுதான் இப்போதைய சிக்கல். நிறைய கடின உழைப்பு தேவை.
எனினும் இப்போது இவர்களை அதிகம் பார்த்து விட்டதால் சிக்கல் களையப்படும்.
ஆஸ்ட்ரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லிக்கு கடினமான...
கணங்கள் காத்திருக்கிறது. இந்திய சூழல்களில் வெற்றி பெறுவது கடினம்தான். ஆனால் இளம் வீரர்களின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. என்றார் ரிக்சன்.
கேப்டன் மைக்கேல் கிளார்க் இல்லாதது எந்த மாதிரி விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு ரிக்சன் கூறுகையில்:
தோனியை இந்திய அணியிலிருந்து எடுத்துவிட்டால் என்ன ஆகும். அதுதான் உங்கள் கேள்விக்குப் பதில் என்றார்.
அவர் இதுபோன்று கூறுவதிலிருந்தே கேப்டன் தோனியின் இயல்பூக்கமான இயற்கையான கேப்டன்சி, மற்றும் பேட்டிங் ஆஸ்ட்ரேலியர்களை எப்படி அச்சுறுத்தியுள்ளது என்பது தெரிகிறது.
No comments:
Post a Comment