ஐ.பி.எல். போட்டி அனுபவம் கை கொடுக்கும்: இந்தியா தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி IPL games experience australia captain
Tamil NewsToday,
மும்பை, அக். 8–
பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரே ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் 20 ஓவர் போட்டி வருகிற 10–ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது. அதை தொடர்ந்து ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 13–ந்தேதி புனேயில் நடக்கிறது.
ஒருநாள் தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி கூறியதாவது:–
ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் எங்கள் அணி வீரர்களுக்கு கைகொடுக்கும் இந்திய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுடன் இணைந்தும், எதிராகவும் வெவ்வேறு மைதானங்களில் விளையாடி இருக்கிறோம்.
இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரை பற்றிய பலம், பலவீனம் தெரியும். இது எங்கள் அணிக்கு சாதகமே. அதே நேரத்தில் எங்களை பற்றி இந்திய வீரர்கள் நன்றாக அறிந்து இருப்பார்கள்.
இந்தியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடர் சவாலானதே. இதனால் இந்த தொடரை வெல்வது பற்றி முன்னதாக எதுவும் கூறிவிட முடியாது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது சிறந்ததாகும். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் எங்களது ஆட்டம் மிகவும் ஏமாற்றம் அளித்தது. இதில் இந்தியா அபாரமாக ஆடியது.
இந்தியாவுக்கு எதிரான இந்த சவால் தொடரில் எங்கள் அணி வீரர்கள் அனைவரும் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெய்லி ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி இருக்கிறார்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment