Wednesday, October 2, 2013

யுவராஜ்சிங்கை களத்தில் மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி: கோலி yavaraj sing and vira kohli

யுவராஜ்சிங்கை களத்தில் மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி: கோலி
by veni
Tamil news, Tamil culture, செய்திகள்

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ்சிங் மீண்டும் இடம் பிடித்தார். உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடிதால் 9 மாதங்களுக்கு பிறகு அவர் தேர் தெடுக்கப்பட்டார். யுவராஜ் சிங்கை மீண்டும் களத்தில் சந்திப்பது மகிழ்ச்சி என்று வீராட் கோலி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

யுவராஜ்சிங் திறமையான வீரர். அவர் அணிக்கு மீண்டும் திரும்புவார் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்ததில்லை. அவர் பிரான்ஸ் நாட்டுக்கு பயிற்சிக்காக சென்றதில் இருந்து யாருடனும் பேசவில்லை. அவர் உடல் எடையை குறைத்து முன்பைவிட மெருகேறி இருக்கிறார். அவரை களத்தில் மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்திய தொடரில் இருந்து விலகினாலும் அந்த அணி திறமை வாய்ந்தது. அவர்களை எளிதாக எடுத்து கொள்ள மாட்டோம்.

தென்ஆப்பிரிக்க தொடரை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறாம். இந்த தொடர் இளம் வீரர்களுக்கு அவர்களது திறமை பரிசோதித்து கொள்ள உதவும்.

The post யுவராஜ்சிங்கை களத்தில் மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி: கோலி appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

No comments:

Post a Comment

Pages

Popular Posts

Popular Posts