சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணி வெற்றி Champions league cricket Rajasthan team win
Tamil NewsYesterday,
ஜெய்ப்பூர், அக்.2-
5-வது சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சும், நியூசிலாந்தை சேர்ந்த ஒட்டாகோவும் (ஏ பிரிவு) மோதின. இதில் முதலில் பேட் செய்த ஒட்டாகோ அணிக்கு ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ராகுல் சுக்லா 'செக்' வைத்தார். ஒரே ஓவரில் ரூதர்போர்டு (5 ரன்), கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் (5 ரன்), டி பூர்டர் (0) ஆகியோரை வெளியேற்றினார்.
என்றாலும் இந்த மெகா வீழ்ச்சியில் இருந்து அணியை பின்னால் வந்த வீரர்கள் ஓரளவு தூக்கி நிறுத்தினர். ரையான் டென் டஸ்சாட் 26 ரன்களும், ஜேம்ஸ் நீஷம் 32 ரன்களும், நாதன் மெக்கல்லம் 28 ரன்களும், இயான் பட்லர் 25 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ஒட்டாகோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சுக்லா 3 விக்கெட்டுகளும், கெவோன் ஹூப்பர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் (10 ரன்), சாம்சன் (5 ரன்), வாட்சன் (2 ரன்), பின்னி (1 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை துரிதமாக இழந்த போதிலும் ரஹானேவும் (52 ரன், 48 பந்து, 7 பவுண்டரி), பிராட் ஹாட்ஜிம் (52 ரன், 23 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி விட்ட அந்த அணி தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.
மேலும் ஐ.பி.எல்.-ல் இருந்து ஜெய்ப்பூர் மைதானத்தில் தொடர்ச்சியாக பதிவு செய்த 12-வது வெற்றியாகும். அதே சமயம் முதல்தர 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடந்ந்து 15 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்திருந்த ஒட்டாகோவின் வீறுநடை இதன் மூலம் முடிவுக்கு வந்தது. மும்பை-பெர்த் இடையிலான ஆட்டத்தின் முடிவை பொறுத்து ஒட்டாகோவின் அரைஇறுதி வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment